இரு வருடங்களாக கோமா நிலையிலிருந்த பெண்ணுக்கு மரணத்திற்கு முன் திருமணம்
by Marikumar
டிப்ஸ்Yesterday, 14:18
சுகவீனமுற்று இரு வருடங்களாக கோமா நிலையில் இருந்த பெண்ணொருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு சில மணித்தியாலங்களில், அவரது உயிரைக் காப்பாற்றப் பொருத்தப்பட்டிருந்த உயிர் காப்பு உபகரணங்கள் நிறுத்தப்பட்டு அவர் மரணத்தை தழுவிய மனதை நெகிழ வைக்கும் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
தென்கிழக்கு சீனாவில் குவாங்டொங் எனும் இடத்தை சேர்ந்த ஹீ ஜிங்ஜிங் என்ற மேற்படி பெண்ணுக்கும் லு லாய் என்ற அவரது காதலருக்கும் 2011ஆம் ஆண்டில் திருமணம் நடைபெறுவதற்கு நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஒரு நாள் வேலைக்குச் சென்ற ஜிங்ஜிங் திடீரென சுகவீனமுற்று கோமா நிலைக்கு உள்ளானார்.
கடந்த இரு வருடங்களாக மீளாத கோமா நிலையில் உயிர்காப்பு உபகரணங்களின் உதவியுடனேயே அவர் உயிர் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஜிங்ஜிங்கின் 28ஆவது பிறந்தநாளில் அவருக்கு அவரது காதலரான லு லாயை திருமணம் செய்து வைத்தபின் அவரது உயிர்காப்பு உபகரணங்களின் செயற்பாட்டை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
மருத்துவமனையில் படுத்த படுக்கையாக சுய உணர்வு இன்றி இருந்த ஜிங்ஜிங்கை லு லாய் திருமணம் செய்தார்.
இந்த திருமணத்தின் ஓர் அங்கமாக பிறந்தநாள் கேக்கும் வெட்டப்பட்டது.
இது தொடர்பில் லு லாய் விபரிக்கையில்,
''நாங்கள் எமது திருமணத்தை விமர்சையாக நடத்த திட்டமிட்டிருந்தோம். அதற்கு பணம் தேவைப்பட்டது. அதனால் அலுவலகத்தில் மேலதிக நேரம் பணியாற்ற வேண்டியிருந்தது.
அளவுக்கதிகமான வேலைப் பளு காரணமாக ஜிங்ஜிங் சுகவீனமடைந்தாள். அவள் சுகவீனமடைந்த நிலையிலும் வேலைக்கு செல்வதை நிறுத்தவில்லை. இறுதியில் அவள் தனது கணணியில் வேலை செய்து கொண்டிருந்த வேளை மயங்கி விழுந்தாள் . அந்த மயக்கம் கடைசி வரை நீங்கவில்லை. அவள் எனது இதயத்தில் எப்போதும் வாழ்கிறாள்'' என்று கூறினார்.
மரணமான ஜிங்ஜிங்கின் உடல் உறுப்புக்கள் அனைத்தும் தானமாக வழங் கப்பட்டுள்ளன.
Share |
Show commentsOpen link
No comments:
Post a Comment