Saturday, September 28, 2013

பிரவுசருக்கு ஒரு குளிர் கண்ணாடி.! Cooling browser

பிரவுசருக்கு ஒரு குளிர் கண்ணாடி.!

by Marikumar

பார்த்துக் கொண்டிருக்கும் டிவி நிகழ்ச்சிகளின் போது நடுவே ஒரு சின்ன பிரேக் என்று சொல்வது போல தொடர்ந்து கம்ப்யூட்டர் பயன்படுத்தும் போது அடிக்கடி சின்ன பிரேக் எடுத்து கொள்வது அவசியம் என்கின்றனர்.இரண்டு வகைகளில் இந்த பிரேக் வலியுறுத்தப்படுகிறது.ஒன்று அமர்தல் தொடர்பா
க!.இன்னொன்று பார்த்த‌லுக்காக!

அதாவது கம்ப்யூட்டரை பயன்படுத்தும் போது ஒரே இடத்தில் ஒரே மாதிரி அமர்ந்திருக்க நேர்கிறது அல்லவா! உடலுக்கு இது கேடு என்று சொல்கின்றனர்.இல்லை எச்சரிக்கின்றனர்.இடுப்பு வலியில் துவங்கி பலவித பாதிப்புகள் இதனால் ஏற்படலாம்.இப்படி கம்ப்யூட்டர் முன் பழியாக கிடப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவர்த்து அளிக்க எர்கோனாமிக்ஸ் என்னும் தனிப்பிரிவே இருக்கிறது.எர்கோனாமிக்ஸ் என்றால் அமர்தல் கலை!

இதே போல கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் மானிட்டரையே பார்த்து கொண்டிருப்பதால் கண்களுக்கு களைப்பு ஏற்படுகிறது.இதை தவிர்க்க இடையிடையே கண்களுக்கு ஓய்வு தேவை என வலியுறுத்துகின்றனர். இதை நாமாக செய்ய மாட்டோம் என்று சரியான இடைவெளியில் ஓய்வு எடுத்துக்கொள்ள உதவுவதற்கு என்றே இணையதளங்களும் செயலிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

அதோடு 20;20 என ஒரு விதியும் உருவாக்கியுள்ளனர்.

இவை தவிர கண்களை பாதுகாப்பதற்கான குளிர்கண்ணாடியும் கூட உருவாக்கப்பட்டுள்ளது.இந்த குளிர் கண்ணாடியை நாம் மாட்டிக்கொள்ள வேண்டியதில்லை .பிரவுசருக்கு மாட்டி விடலாம்.

நீண்ட நேரமாக கம்ப்யூட்டர் மானிட்டரை பார்த்து கொண்டிருக்கும் போது அதன் பிரகாசத்தன்மை கண்களுக்கு அயர்ச்சியை உண்டாக்கும்.குறிப்பாக மீக நீளமான கட்டுரையை படிக்கும் நிலை ஏற்பட்டால் கண்களில் பூச்சி பற‌ப்பது போல உணர்வு ஏற்படலாம்.

இதை தவிர்க்க கம்ப்யூட்டர் திரையின் பிரகாசத்தை கொஞ்சம் கொஞ்சம் குறைத்து கொண்டால் படிக்கும் போது கணகளுக்கு இதமாக இருக்கும் அல்லவா? கூகுல் கூரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு சேவையாக உருவாக்கப்பட்டுள்ள சன் கிளாசஸ் இதை தான் செய்கிறது.

இந்த பிரவுசர் நீட்டிப்பை டவுண்லோடு செய்து கொண்டால் ,கம்ப்யூட்டரில் படிக்கும் போது அயர்ச்சியாக உணர்ந்தால் உடனே இதை கிளிக் செய்து பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தின் பிரகாசத்தை குறைத்து கொள்ளலாம்.

குளிர்கண்ணாடி வழியே பார்க்கும் போது கண்கள் கூசாமல் காட்சிகள் இதமாக தெரிவது போல இப்போது இணையதளமும் பிரகாசம் குறைந்து மங்களாக ஆனால் தெளிவாக தெரியும்.எந்த அளவுக்கு பிரகாசம் குறைய வேண்டும் என்று கூட தீர்மானித்து கொள்ளலாம்.இதற்காக நீட்டிப்பில் உள்ள கட்டத்தில் மாற்றம் செய்து கொள்ளலாம். கட்டத்தின் நடுவே உள்ள கர்சரை அப்படியும் இப்படியும் நகர்த்தினால் பிரகாசம் கூடும் குறையும்.

கம்ப்யூட்டரிலேயே பிரகாசத்தை மாற்றி கொள்ளும் வசதி இருக்கிறது.ஆனால் இந்த பிரவுசர் சேவை கம்ப்யூட்டரில் எந்த மாற்றமும் செய்யாமல் பிரவுசரில் மாற்றம் செய்து பார்க்கும் இணையதளத்தின் பிரகாசத்தை மங்களாக்கி தருகிறது.

அதாவது பிரவுசருக்கு குளுர்கண்ணாடியை அணிவித்து நம் கணகளுக்கு இதம் தருகிறது.

குளிர்கண்னாடி டவுண்லோடு செய்ய:

cybersimman
Share |

Show commentsOpen link

மகப்பேறு தழும்புகளை எளிதில் குறைக்க சில வழிகள்! Tamil ladies special tips

மகப்பேறு தழும்புகளை எளிதில் குறைக்க சில வழிகள்!!!

by Marikumar

கர்ப்பத்தின் போது பெரிதான வயிறு, பிரசவத்திற்குப் பின்னர் படிப்படியாக குறையும். நார்மல் டெலிவரி ஆனாலும் சரி, சிசேரியன் ஆனாலும் சரி, வயிற்றில் தழும்பு ஏற்படுவது இயல்பு. இந்த தழும்புகள் பெண்களின் மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். குழந்தை பெற்ற பின், பொதுவாக எல்லோருக்கும் ஏற்படக்கூடிய பிரச்னை தான் தழும்புகள் என்றாலும், இது மிகுந்த மன சங்கடத்தை அளிக்கும். இத்தழும்புகளை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், இயற்கை முறையில் இவற்றை குறைக்க முடியும்.

அதிலும் இத்தகைய மகப்பேறு தழும்புகளை இயற்கையாக குறைக்க சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அப்படி அதிசயக்க வைக்கும் சில வீட்டு வைத்தியங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வைத்தியம் இயற்கையாகவே மகப்பேறு தழும்புகளை குறைத்து, தோலில் நிறமாற்றம் பெற உதவ முடியும். எனவே மகப்பேறு தழும்புகளை போக்க விரும்புபவர், கீழே கொடுக்கப்பட்ட குறிப்புகளை முயற்சித்து பார்க்கலாம்.

எலுமிச்சையில் இயற்கையாகவே வெளுக்கும் தன்மை உள்ளது. ஆகவே தழும்புகள் உள்ள இடத்தில் எலுமிச்சை சாறு கொண்டு மசாஜ் செய்தால் தழும்புகள் மறையும்.

தழும்புகளில் ஐஸ் கட்டிகள் கொண்டு மசாஜ் செய்வது, சரும துளைகளை இறுக்கி தோல் நிறமிகளை குறைக்கும். ஆகவே தழும்புகள் குறையும்.

தக்காளி சாற்றில் உள்ள ஆன்டி ஆக்சிஜனேற்ற பண்புகள் சரும நிறத்தை குறைத்து, சேதம் உண்டாவதை தடுக்கிறது.

ஆப்ரிகாட்டை ஊற வைத்து அரைத்து, தழும்புகள் உள்ள இடத்தில் வாரம் மூன்று முறை தடவி வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி, சருமத்தை சரிப்படுத்தி சருமத்தில் உள்ள நிறமிகளை குறைக்கிறது.

ஆலிவ் எண்ணெய் கொண்டு சருமத்தை மசாஜ் செய்யவும். இது தழும்புகளை போக்குவது மட்டுமல்லாமல், சருமத்தை ஈரப்பதமாக்கி மிருதுவாக்கும்.

ஓட்ஸை பாலில் கலந்து தழும்புகள் உள்ள இடத்தில தேய்க்க வேண்டும். இது தழும்புகளை குறைக்க ஒரு சிறந்த வழி. ஏனெனில் ஓட்ஸ் கொண்டு தேய்ப்பது இறந்த செல்களை நீக்கிவிடும்.

மகப்பேறு தழும்புகளை உடனடியாக மறைக்க வேண்டும் என்றால் கன்சீலர் உபயோகிக்க வேண்டும். ஏனென்றால் கன்சீலர் சரும நிறத்தை விட ஒருபடி குறைவாக இருக்கும். ஆகவே தழும்புகள் உடனடியாக மறைக்கப்படும்.

Thatstamil
Share |

Show commentsOpen link

சந்தானமும்- சிவகார்த்திகேயனும் ஏன் சேர்ந்து நடிப்பதில்லை? Santhanam and sivakarthikeyan

சந்தானமும்- சிவகார்த்திகேயனும் ஏன் சேர்ந்து நடிப்பதில்லை?

by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today, 12:49

தமிழ்சினிமாவில் இளம் ஹீரோக்களின் பர்ஸ்ட் சாய்ஸாக இருக்கும் சந்தானம் சிவகார்த்திகேயனுடம் மட்டும் ஏன் இன்னும் சேர்ந்து நடிக்கவில்லை?

இந்த கேள்வியும், குழப்பமும் எல்லோருக்கும் இருக்கும்.

மேற்படி இருவருமே விஜய் டி.வி.யில் காமெடி ரியாலிட்டி ஷோக்களை செய்து விட்டு அதன்மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர்கள் தான். ஆனால், ஏனோ இரண்டு பேருக்கும் இப்போது வரை எந்த வகையிலும் சுமூகமான உறவு இல்லை.

'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தின் சக்சஸ் மீட்டில் கூட சிவகார்த்திகேயனிடம் இதுபற்றி கேட்டபோது " சந்தானத்துடன் சேர்ந்து நடிக்க இன்னும் சான்ஸ் எதுவும் கிடைக்கவில்லை, அப்படி கிடைத்தான் கண்டிப்பாக நடிப்பேன்" என்று சிரித்துக் கொண்டே தான் சொன்னாரே தவிர சந்தானத்துடன் அவர் சேர்ந்து நடிக்கும் படம் தான் இதுவரை எதுவுமில்லை.

ஆனால் சிவகார்த்திகேயன் ரெடியாக இருந்தாலும் சந்தானம் அவருடன் சேர்ந்து நடிக்க தயாராக இல்லை என்பது தான் உண்மை.

சமீபத்தில் ரிலீஸான 'யா யா' படத்தில் முதலில் சிவாதான் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. அவரிடம் பேசி அட்வான்ஸும் கூட கொடுத்து விட்டார்கள். ஆனால் 'அவன் ஹீரோன்னா… நான் நடிக்க மாட்டேன்' என்று சந்தானம் கண்டிஷனாக சொல்லி விட்டாராம். இதனால் வேறு வழியின்றி சிவகார்த்திகேயனைத் தூக்கிவிட்டு 'மிர்ச்சி' சிவாவை நடிக்க வைத்திருக்கிறார்கள்.

அடுத்து 'ராஜா ராணி' படத்திலும் இதே கூத்து தான். அந்தப்படத்திலும் ஜெய் கேரக்டரில் முதலில் கமிட்டானவர் சிவகார்த்திகேயன் தான். வழக்கம் போல அங்கேயும் சந்தானம் முரண்டு பிடிக்க, சிவகார்த்திகேயனை தூக்கி விட்டு ஜெய்யை நடிக்க வைத்தாராம் டைரக்டர் அட்லீ.

இப்படி சிவகார்த்திகேயன் மீது சந்தானம் உச்சகட்ட வெறுப்பில் இருப்பது ஏன்?

விசாரித்தால் விஷயம் என்னவோ கடுகளவு சமாச்சாரம் தான்.

அதாவது இரண்டு பேர்களுமே விஜய் டிவியில் காமெடிப் பண்ணித்தான் சினிமாவுக்குள் வந்தார்கள். அப்படி இருக்கும் போது சிவகார்த்திகேயனை மட்டும் ஹீரோவாக நடிக்கிறாரே..? நாம் வெறும் காமெடியனாக மட்டும் இருக்கிறோமே..? என்ற மன வெறுப்பு தான்
சந்தானம் சிவகார்த்திகேயனுடன் நடிக்காததன் மர்மமாம்.

என்ன பண்றது யார் யாருக்கு எதுன்னு எழுதி வெச்சிருக்கோ… அதுபடிதானே நடக்கும்? சந்தானம் சார்…

The post சந்தானமும்- சிவகார்த்திகேயனும் ஏன் சேர்ந்து நடிப்பதில்லை? appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

Friday, September 27, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – விமர்சனம்! Oonayum aattukuttiyum tamil movie review

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – விமர்சனம்!

by admin
TamilSpyToday,

இருட்டுக்கே வாக்கப்பட்ட இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின். ஆனால் பிரகாசமான திரைப்படங்களைப் படைப்பதில் அவர் வல்லவர். அதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். தனிப்பட்ட விமர்சனங்களைத் தாண்டி நிகழ்கால மாற்றுசினிமா இயக்குனர்களின் பட்டியலில் மிஷ்கினுக்கு முக்கிய இடம் உண்டு.

இளையராஜாவின் இசை ராஜாங்கத்தோடு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் உலவும் காட்டில் தன் திரைக்கதை மூலம் அதிரடி வேட்டை நடத்துகிறார் மிஷ்கின். வாரம் ஒரு காமெடிப் படம் என்று 'டிரெண்டு' பேசும் திரைக்கதைப் புலவர்களுக்கு, நம் வாழ்வின் பல விஷயங்களை மறந்துவிட்டோம் என்று சின்ன ஊசியால் குத்தி சுரணையூட்டுகிறார் படத்தின் இயக்குனர்.

முதல் ஷாட்டே அசரவைக்கிறது. குண்டடிப்பட்டு ரோட்டில் கிடக்கும் ஒரு கிரிமினல் குற்றவாளியை பல போராட்டங்களுக்குப் பிறகு அவன் யாரென்றே தெரியாத நிலையிலும், தன் வீட்டிற்கே கொண்டு வந்து மனிதாபிமான முறையில் அவனுக்கு சிகிச்சைக் கொடுத்து அவனைக் காப்பாற்றுகிறான் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவன். காப்பாற்றப்பட்ட குற்றவாளியோ மறுநாள் காலை காணாமல்போகிறான்.

போலிஸ் மாணவனைக் கைது செய்து, அவன் குடும்பத்திற்கு பல டார்ச்சர்களைக் கொடுக்கிறது. ஒரு நாள் அந்த கிரிமினல் குற்றவாளி மாணவனை தொலைபேசியில் தொடர்புகொண்டு, உன்னை நான் சந்திக்க வேண்டும் என்று மாணவனிடம் சொல்ல, உஷாரான போலிஸ், அந்த சந்திப்பின் போது மாணவனிடம் துப்பாக்கியைக் கொடுத்து அந்த குற்றவாளியைக் கொலைசெய்யச் சொல்கிறது. மாணவனின் பின்னணியில் போலிஸ் இருக்கிறது என்று தெரிந்து சுதாரித்துக் கொள்ளும்குற்றவாளி, ஒரு சாகசத்தை நடத்தி, தப்பிப்பதோடு மட்டுமல்லாமல், அந்தக் மாணவனையும் அவனோடு கூட்டிச்சென்றுவிடுகிறான்.

ஓநாயிடம் ஆட்டுக்குட்டி சிக்கிக்கொள்ள, ஆட்டுக்குட்டியை வைத்து ஓநாயைப் பிடிக்க, புலிகளாக பிளான் போடும் போலிஸ் பூனைகளாக்கப்படுவதும், இதற்கு பின்னணியில் சில நரிகளான வில்லன்கள் ஓநாய்க்கு வலைவீசுவதும், யார் யாரை வேட்டையாடுகிறார் என்பதும் தான் மீதிக் கதை.

இவர்களின் ஓட்டம் முழுவது ஒரு பார்வை இழந்த குடும்பத்தைக் காப்பாற்றத்தான் என்று திரைக்கதை அமைத்திருப்பது இயக்குனரின் அபாரத்திறமையை வெளிச்சம் போடுக்காட்டுகிறது. இதில் ஓநாயாக இயக்குனர் மிஷ்கினும் ஆட்டுகுட்டியாக வழக்கு எண் 18/9 படத்தின் நாயகன் ஸ்ரீ-யும் சாபாஷ் போட வைக்கிறார்கள்.

ஒரு மருத்துவக் கல்லூரி மாணவன் தன் வீட்டில் வைத்து குண்டடிப்பட்ட ஒரு குற்றவாளியை மேஜர் ஆப்பரேஷன் மூலம் காப்பாற்றிவிட முடியுமா என்று கேள்வி எழுந்தாலும் அதை நம்புகிற வகையில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர். என்ன நடக்கப்போகிறது என்று சிந்திப்பதற்குள்ளாகவே, மிஷ்கினை தன் தொளில் சாய்த்துக்கொண்டு பைக்கில் ஸ்ரீ வேகமாய் செல்லும்போது பளிச்சென விஸ்வரூபம் எடுக்கிறாரே இளையராஜா- அது இளையராஜாவின் இசை மாயாஜாலம்!

கட் இல்லாத மீக நீண்ட ஷாட்டுகள், அகண்டுவிரிந்த தெருக்களில் ஒரு ஓரமாய் வைக்கப்பட்ட கேமராவின் ஆங்கில்.கால்களை மட்டுமே காண்பித்து என்ன நடக்கிறது என்று நமக்கு புரியவைக்கும் காட்சிகள், அளவான வசனங்களாக இருந்தாலும் அந்த சீரியஸ் வசனங்களை வைத்தே சில இடங்களில் சிரிப்பை வரவழைப்பது என மிஷ்கினுக்கான அடையாளங்கள் எல்லாமே இப்படத்தில் அடக்கம்.

இந்த இடத்தில் பிளாஷ் பேக் வந்தே ஆகனும், ஆனா பிளாஷ் பேக் வந்தால் அது படத்தையே சிதைத்துவிடும் – அதை எப்படி செய்யப்போகிறார் என்று நாம் பலத் திரைக்கதை வடிவங்களை யோசித்துக்கொண்டிருக்க 'ஒரு நீண்ட ஷாட்டில் 'ஓநாய் – ஆட்டுக்குட்டி' கதையில் பிளாஷ் பேக் சொல்லி நெகிழவைத்து அசத்திவிட்டார் மிஷ்கின்.

தென்றலாய்… மழையாய்… புயலாய்… இடியாய்… மௌனமாய்… இசை ராஜாங்கம் நடத்தும் இளையராஜா படத்தின் முதுகெலும்பு. பாலாஜி வி ரங்கா மிஷ்கினின் கண்களை கடன் வாங்கி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். டமால் டுமீல் என்று தீபாவளி பண்டிகைக் கொண்டாடுவதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

காப்பாற்றிய மாணவனை எதற்காக கிரிமினல் குற்றவாளி தானாக சந்திக்க வரவேண்டும்? ஒரு வேளை அந்த மாணவனின் குடும்பத்தை போலிஸிடமிருந்து காப்பாற்றவா? என நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில்… க்ளைமாக்ஸ் காட்சியில் அந்தப் பார்வையிழந்த சிறுமியை அவன் தோளில் தூக்கி நடந்து செல்லும் காட்சி அதற்கான முழு விளக்கத்தையும் சொல்லிவிடுகிறது.

க்ளைமாக்ஸ் காட்சியின் சண்டையில், பார்வை இழந்த சிறுமியின் ஆடையில் இருக்கும் பெல்ட்டை பின்னால் வால் போல் கட்டிக்கொண்டு, அந்தச் சிறுமியை அதைப் பிடித்துக்கொள்ள சொல்வதும். அப்படியே சண்டை போடுவதும் திரையில் பிரம்மாண்டத்தைக் காட்டுவதற்கு பல கோடிகள் தேவையில்லை ஒரு சின்ன பெல்ட்டே போதும் என நிரூபித்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். ஒரு ஓநாயப் போல தோற்றத்தில் தன்னை சித்தரிதுக்கொள்வதும் புதுமை!

எல்லா தயாரிப்பாளர்களும் ஒரு மஞ்ச சேலை டான்ஸ் கேக்குறாங்க என்று பல மேடைகளில் புலம்பி இருக்கிறார் மிஷ்கின். இதில் தானே தயாரிப்பாளர் என்பதால் பாடல்களே இல்லை என ஒரு நல்ல முடிவெடுத்திருப்பது படத்தின் பலம்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – விறுவிறுப்பான வேட்டை! வித்தியாச அனுபவம்!

Show commentsOpen link

Wednesday, September 25, 2013

இரண்டே நாட்களில் இப்படி அழகாகலாம் best beauty in two days

இரண்டே நாட்களில் இப்படி அழகாகலாம்

by Marikumar

முக்கியமான நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்ளவேண்டும். ஆனால் இரண்டே நாட்கள்தான் இருக்கின்றன. அதற்குள் உங்களை நீங்கள் அழகுபடுத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதா? இருக்கிறது. இரண்டு நாட்கள் போதும், உங்களை நீங்கள் சூப்பராக அழகாக்கிக்கொள்ள..! வீட்டிலேயே அதை செய்துவிடலாம்..!

சருமத்திற்கு

வறண்ட சருமம் உங்களுக்கு பிரச்சினையாக இருந்தால் உடல் முழுவ தும் 'லிக்யூட் சோப்' பூசி, 'பாடி ஸ்கிரப்' பயன்படுத்தி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பின்பு நிறைய தண்ணீர் ஊற்றி, நன்றாக கழுவிவிடுங்கள். சருமத்திற்கு பளபளப்பு கிடைக்கும்.

அழகான விழிகளுக்கு

டீ பக் ஒன்றை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்கவிடுங்கள். பின்பு அதை எடுத்து நன்றாக குளிரவையுங்கள். அதை கண்களை மூடிக்கொண்டு, கண் மீது எல்லா இடங்களிலும் படும்படி பத்து நிமிடங்கள் வையுங்கள்.

தேயிலையில் அடங்கியிருக்கும் கபீன், கண் இமைப் பகுதிகளை அழகாக்கி, கண்களை ஜொலிக்கவைக்கிறது. கண்களில் இருக்கும் வீக்கங்களை அகற்றி பளிச்சிடச்செய்யும். நன்றாக தூங்காவிட்டால் கண்களின் அடியில் கறுப்பு நிறம் படியும். அதையும் நீக்கும் சக்தி, டீபக்கிற்கு இருக்கிறது.

முகப்பரு நீங்க

பளிச்சென இருக்கும் முகத்தில் பருக்கள் தோன்றி நிறைய பெண்களின் தன்னம்பிக்கையை குறைக்கிறது.

அதற்கும் பரிகாரம் இருக்கிறது. ஒரு ஐஸ் கட்டியை துணியில் பொதிந்து மூன்று நிமிடங்கள் முகப்பரு மீது வைத்திருங்கள். பின்பு துணியில் இருந்து ஐஸ் கட்டியை நீக்கிவிட்டு, அந்த துணியை லாவண்டர் எண்ணெய்யில் தோய்த்து, பரு மீது வையுங்கள். இவ்வாறு செய்தால், பக்டீரியா தாக்கம் நீங்கி, இரண்டு நாட்களில் முகப்பரு மறையும்.

கூந்தல் அழகுக்கு

நீங்கள் விருந்து நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முதல் நாளே உங்கள் முடிக்கு ஏற்ற தரமான ஷாம்புவும், கண்டிஷனரும் பயன்படுத்தி தலையை நன்றாக கழுவுங்கள். நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு தலைக்கு குளித்து, கூந்தலை நன்றாக உலர வையுங்கள். பின்பு கூந்தலை பல பாகங்களாக பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் 'ப்ளோ டிரை' செய்யுங்கள். இறுதியில் முடியின் இறுதிப்பகுதியில் ஹெயர் வாக்ஸ் பூசுங்கள். இதன் மூலம் முடி உடைந்து போன அழகு குறைபாடு நிவர்த்தி செய்யப்படும். அழகும், ஜொலிப்பும் கூந்தலுக்கு இதன் மூலம் கிடைக்கும்.

பாதங்களுக்கு

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பாதங்களில் பெட்ரோலியம் ஜெலி பூசி, காலுறை அணிந்துகொண்டு தூங்குங்கள். மறுநாள் பாதங்களுக்கு மென்மையும், அழகும் கிடைக்கும்.

மேக்-அப் நிலைத்திருக்க

முகத்தில் பவுண்டேஷனும், காம்பேக்ட் பவுடரும் பயன்படுத்திய பின்பு அதில் சிறிதளவு தண்ணீர் ஸ்பிரே செய்து, டிஸ்யூ பேப்பர் வைத்து ஒற்றி எடுத்தால், மேக்-அப் அதிக நேரம் நிலைத்திருக்கும்.

லிப்ஸ்டிக் அதிக நேரம் நிலைத்திருக்க உதடுகளில் கண்சீலர் போட்ட பின்பு லிப்ஸ்டிக் போடுங்கள். நெயில் பாலீஷ் இளகிப்போகாமல் இருக்க, அதன் மேல் கிளீயர் கோட் ஒன்று கொடுங்கள்.
Share |

Show commentsOpen link

Monday, September 23, 2013

இரு வருடங்களாக கோமா நிலையிலிருந்த பெண்ணுக்கு மரணத்திற்கு முன் திருமணம் koma stage girl marriage

இரு வருடங்களாக கோமா நிலையிலிருந்த பெண்ணுக்கு மரணத்திற்கு முன் திருமணம்

by Marikumar
டிப்ஸ்Yesterday, 14:18

சுக­வீ­ன­முற்று இரு வரு­டங்­க­ளாக கோமா நிலையில் இருந்த பெண்­ணொ­ரு­வ­ருக்கு திரு­மணம் செய்து வைக்­கப்­பட்டு சில மணித்­தி­யா­லங்­களில், அவ­ரது உயிரைக் காப்­பாற்றப் பொருத்­தப்­பட்­டி­ருந்த உயிர் காப்பு உப­க­ர­ணங்கள் நிறுத்­தப்­பட்டு அவர் மர­ணத்தை தழு­விய மனதை நெகிழ வைக்கும் சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

தென்­கி­ழக்கு சீனாவில் குவாங்டொங் எனும் இடத்தை சேர்ந்த ஹீ ஜிங்ஜிங் என்ற மேற்­படி பெண்­ணுக்கும் லு லாய் என்ற அவ­ரது காத­ல­ருக்கும் 2011ஆம் ஆண்டில் திரு­மணம் நடை­பெ­று­வ­தற்கு நிச்­ச­யிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் ஒரு நாள் வேலைக்குச் சென்ற ஜிங்ஜிங் திடீ­ரென சுக­வீ­ன­முற்று கோமா நிலைக்கு உள்­ளானார்.

கடந்த இரு வரு­டங்­க­ளாக மீளாத கோமா நிலையில் உயிர்­காப்பு உப­க­ர­ணங்­களின் உத­வி­யு­ட­னேயே அவர் உயிர் வாழ்ந்து வந்­துள்ளார்.

இந்­நி­லையில் ஜிங்­ஜிங்கின் 28ஆவது பிறந்தநாளில் அவ­ருக்கு அவ­ரது காத­ல­ரான லு லாயை திரு­மணம் செய்து வைத்தபின் அவரது உயிர்காப்பு உபகரணங்களின் செயற்பாட்டை நிறுத்துவதற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

மருத்­து­வ­ம­னையில் படுத்த படுக்­கை­யாக சுய உணர்வு இன்றி இருந்த ஜிங்­ஜிங்கை லு லாய் திரு­மணம் செய்தார்.

இந்த திரு­ம­ணத்தின் ஓர் அங்­க­மாக பிறந்தநாள் கேக்கும் வெட்­டப்­பட்­டது.

இது தொடர்பில் லு லாய் விப­ரிக்­கையில்,

''நாங்கள் எமது திரு­ம­ணத்தை விமர்­சை­யாக நடத்த திட்­ட­மிட்­டி­ருந்தோம். அதற்கு பணம் தேவைப்­பட்­டது. அதனால் அலு­வ­ல­கத்தில் மேல­திக நேரம் பணி­யாற்ற வேண்­டி­யி­ருந்­தது.

அள­வுக்­க­தி­க­மான வேலைப் பளு கார­ண­மாக ஜிங்ஜிங் சுக­வீ­ன­ம­டைந்தாள். அவள் சுக­வீ­ன­ம­டைந்த நிலை­யிலும் வேலைக்கு செல்­வதை நிறுத்­த­வில்லை. இறு­தியில் அவள் தனது கண­ணியில் வேலை செய்து கொண்­டி­ருந்த வேளை மயங்கி விழுந்தாள் . அந்த மயக்கம் கடைசி வரை நீங்கவில்லை. அவள் எனது இதயத்தில் எப்போதும் வாழ்கிறாள்'' என்று கூறினார்.

மரணமான ஜிங்ஜிங்கின் உடல் உறுப்புக்கள் அனைத்தும் தானமாக வழங் கப்பட்டுள்ளன.


Share |

Show commentsOpen link

Labels

Popular Posts