ஒரு காலத்தில் குணப்படுத்த முடியாத
நோயாக இருந்த பக்கவாதம் நோயை தற்போது
நவீன மருத்துவத்தினால் குணப்படுத்த
முடியும். வராமல் தடுக்க முடியும்.
இதன் முக்கிய காரணம். அதிக
கொழுப்பு உணவு, அதிக எடை, இரத்தக்
கொதிப்பு, சர்க்கரை நோய், இரத்த
அணுக்களின் பாதிப்பு போன்றவை.
ஸ்ட்ரோக் (வாதநோய்) என்றால் மாரடைப்பா?
ஸ்ட்ரோக் என்பது மூளையில் இரத்த ஓட்ட
பாதிப்பை குறிப்பது.
ஸ்ட்ரோக் – ஐ குணப்படுத்த முடியாதா?
முடியும். ஸ்ட்ரோக் வந்தவுடன் தீவிர
சிகிச்சையளித்தால் நல்ல பலனளிக்கும்
வயதானவர்களுக்குத்தான் ஸ்டோக் வருமா?
எல்லா வயதினருக்கும் வரலாம்.
முதியோருக்கு அதிகமாக ஏற்படும்.
ஸ்டேராக் -ஐ தடுக்க முடியுமா?
பொரும்பாலான ஸ்ட்ரோக் ஐ தடுக்க முடியும்.
நாற்பது வயதிற்கு மேற்பட்டோர் தினமும் 50
மி.கிஆஸ்பிரின் மற்றும் நபஅபஐச
மாத்திரைகளை சாப்பிட்டால்
ஸ்ட்ரோக்கை தடுக்கலாம்.
ஸ்ட்ரோக் வந்தால் முற்றிலும் குணமாகாதா?
தொடர்ந்து சிகிக்சையளித்தால் பெரும் பாலும்
குணமாகும். சிலருக்கு சில வாரங்கள்
ஆகலாம். இன்னும் சிலருக்கு மேலும் அதிக
நாட்கள் ஆகலாம்.
முதியவர்களின் உடல் பாதிப்பிற்கான முக்கிய
நோய்கள் என்னென்ன?
ஸ்ட்ரோக், மாரடைப்பு, புற்று நோய்
போன்றவை.
ஸ்ட்ரோக் எப்படி ஏற்படுகிறது?
மூளையில் இரத்தக் குழாய்களின் பாதிப்பால்
ஏற்படுகிறது.
ஸ்ட்ரோக் எத்தனை வகை உள்ளன?
இரத்தக் குழாய் அடைப்பால், மூளையில்
இரத்த ஓட்ட குறைவு ஏற்படுதல் ஒருவகை.
மூளையின் இரத்தக் குழாய் வெடித்து இரத்த
கசிவு ஏற்பட்டு அதனால்
மூளை பாதிப்பு ஏற்படுதல் மற்றொரு வகை.
ஸ்ட்ரோக் வருமுன் அறிகுறிகள் என்னென்ன?
முகத்தில் மரமரப்பு, கை கால்களில் பலவீனம்,
உடலின் ஒரு பாதியில் உணர்வு குறைதல்,
திடீர் குழப்பம், பேச இயலாமை, பிறர்
பேசுவதை புரிய இயலாமை, நடக்க
இயலாமை, தலைச் சுற்றல்,
நடை தடுமாறுதல், கையிலிருந்து பொருள்கள்
நழுவி விடுதல், பார்வை மங்குதல், பொருள்
இரட்டை யாகத் தெரிதல், மயக்கம், குமட்டல்,
வாந்தி போன்ற அறிகுறிகள் உண்டாகலாம்.
மினி ஸ்ட்ரோக் என்றால் என்ன?
சிலருக்கு தற்காலிகமாக (24
மணி நேரத்திற்கு குறைவாக) கைகால்,
பலவீனம், ஊசி குத்துதல், போன்றஉணர்வு,
நடைத் தடுமாறல், தலைச்சுற்றல், மயக்கம்,
பொருட்கள் இரட்டையாக தெரிதல்
போன்றஅறிகுறிகள் காணப்படும். ஆனால்
சரியான சிகிச்சை அளித்தால் ஒரே நாளில்
முற்றிலுமாக குணமாகிவிடும்.
யார் யாருக்கு ஸ்ட்ரோக் ஏற்படுகிற
வாய்ப்புகள் அதிகம்?
அதிக இரத்த அழுத்தம், இதய நோய்,
சர்க்கரை நோய், அதிக கொழுப்பு,
மதுவிற்கு அடிமை யானவர்கள்,
புகை பிடித்தல், போதைப் பொருட்
களை உபயோகிப்பவர்கள் போன்றோருக்கும்
பெண்களில் பிரசவத்திற்குப் பின்பும்
மெனோபஸ் சமயத்திலும் ஸ்ட்ரோக்
உண்டாகின்ற வாய்ப்புகள் அதிகம்.
ஸ்ட்ரோக்கை தடுப்பது எப்படி?
கொழுப்பு குறைவான உணவு, அளவான
எடையை பராமரித்தல், நாள்தோறும்
உடற்பயிற்சி மற்றும் யோகப் பயிற்சி, இரத்த
அழுத்தம், கொழுப்பு.,
சர்க்கரை போன்றவைகளைக்
கட்டுப்படுத்துதல், புகை பிடிக்காமை,
நாள்தோறும் சிறிதளவு ஆஸ்பிரின்
சாப்பிடுதல் போன்றவைகளின் மூலம் தடுக்க
முடியும்.
ஸ்ட்ரோக்கிற்கு ஆபரேஷன் பலனளிக்குமா?
சிலருக்கு கழுத்திலுள்ள கரோடிட் தமனியில்
அடைப்பிருந்தால் அதை அறுவை சிகிச்சையில்
சரிசெய்ய முடியும். மூளையின் இரத்தக்
குழாயை கிளிப் மூலம் அடைத்து விட்டடால்
பாதிப்படைந்த இரத்தக் குழாய்
வெடிப்பதை தவிர்க்க முடியும்.
ஸ்ட்ரோக்கினால் மூளை வீக்கம்
ஏற்பட்டோருக்கு, அறுவை சிகிச்சை மூலம்
மூளையின் அழுத்தத்தைக் குறைக்கலாம்.
ஸ்ட்ரோக் வந்தவர்கள் எப்படி நடந்து கொள்ள
வேண்டும்.?
பலமிழந்த கைகால்களுக்கு தொடர்ந்து பயிற்சி,
பேச்சுப் பயிற்சி, நடைப்பயிற்சி முதலியன..
தொடர்ந்து பிறநோய்களுக்கு முறையான
சிகிச்சைகள், ஸ்ட்ரோக்
தடுப்பு சிகிச்சை முறைகள்
போன்றவை அவசியம்.
ஸ்ட்ரோக்கில் பாதிப்பு எப்படி?
நமது மூளையின் விசித்திரம் என்னவென்றால்
இடப்புறத்தை வலது மூளையும் ,
வலப்புறத்தை இடது மூளையும்
நிர்வகிக்கின்றன.
மூளைக்குச் செல்லும் இரத்த ஒட்டம்
குறைந்துவிட்டால் அல்லது அந்த இரத்தக்
குழாயிலிருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டால்
அல்லது அடிபட்டால் அப்பக்க
மூளை பாதிப்படைந்து விடும்.
இடது பக்க மூளை பாதிக்கப்படாமல் உடம்பின்
வலப்பக்கத்தில் செயலாற்றல் பாதிப்படையும்.
மேலும் வலது கை மற்றும் வலது கால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு பேசும் திறனும்
பாதிக்கப்படும். ஏனெனில்
பொரும்பாலோருக்கு மூளையின்
இடதுபாகத்தில்தான் பேச்சுத் திறன் நரம்புகள்
உள்ளன.
பக்கவாதத்திற்கு காரணங்களும்
பரிசோதனைகளும்
இரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து,
சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு நோய்,
புகைப்பழக்கம், பால்வினை நோய், (சிபிலிஸ்)
இரத்தக் குழாயின் நோய்கள், இரத்த
அணுக்களின் நோய்களால் அளவிற்கதிமாக
இரத்த உறையும் தன்மை, தலையில் காயம்,
மூளைக்கட்டி போன்றவை.
மேலும்
கருத்தடை மாத்திரை சாப்பிடு வோருக்கு ஸ்ட்ரோக்
பாதிப்பு ஏற்படலாம்.
ஸ்ட்ரோக் என்பது இதயத்தில்
மாரடைப்பு பாதிப்பை போன்ற மூளைப்
பாதிப்பு ஆகும்.
பக்கவாதத்திற்கு காரணமான இரத்தக்
கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக கொழுப்பு,
இரத்த அணுக்களின் நோய்
போன்றவற்றிற்கு ஏற்ப இரத்தம்., சிறுநீர்,
இ.சி.ஜி, ஸ்கேன் பரிசோதனையும் அவசியம்.
பக்கவாத சிகிச்சை முறைகள்
* மூளையின் வீக்கத்தைக் குறைக்க
புருசமைடு மற்றும் மேனிட்டால் மருந்துகள்.
* மூளையில் இரத்த உறைவை குறைக்க
ஆஸ்பிரின் மற்றும் ஆண்டி கோயகுலண்ட்
மருந்துகள்.
* மூளையின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க
ட்ரென்டால் மற்றும் பைரசிடாம் மருந்துகள்.
* படுக்கின்ற
நிலையை அடிக்கடி மாற்றி வைத்தால்
படுக்கைப் புண்ணைத் தவிர்க்கலாம்.
* சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு நோய்
போன்ற காரணிகளுக்கு தேவையான
மருந்துகள்.
* சிறுநீர் கழிக்க முடியாதவர்களுக்கு கத்தீடர்
மூலம், சிறுநீரை வெளியேற்றுதல்.
* வலுவிழந்த கை,கால்
தசைகளுக்கு பிஸியோதிரபி பயிற்சிகள் நல்ல
பலனளிக்கும்.
*மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு பாதிப்
படைந்தால் சிகிச்சையை அதற்கேற்ப
மாற்றி அமைக்க வேண்டும்.
வலிப்பு நோயின் வெளிப்பாடு
நமது மூளையின்
நரம்பு செயல்களிருந்து வெளிப்படுகிற
மின்சார சக்தியால் தான் நம்முடன்
ஒவ்வொரு பாகமும் அசைவடைகிறது. ஆனால்
அதுவே அசாதாரமான அளவில் வெளிப்பட்டால்
அளவுக்கு மீறிய கட்டுப்பாடில்லாத
அசைவுகள் உட லெங்கும் ஏற்படும். அதனால்
வலிப்பு உண்டாகிறது.
இதற்கு குறிப்பிட்ட காரணம்
என்னவென்று பெரும்பாலோருக்கு சொல்ல
முடிவதில்லை. அதை காரணமில்லாத
வலிப்பு என்பர்.
சிலருக்கு மூளையில் கட்டியோ,
அல்லது அடிபட்டாலோ அதனால்
வலிப்பு ஏற்படும்.சிலருக்கு கை, கால்கள்,
இழுக்காமல் சுய நினைவு மட்டும்
மாறிவிடும்.சிலருக்கு திடீரென கோபம்,
ஆவேசம் அல்லது பயம்,
அழுகை அல்லது கலகல சிரிப்பு போன்ற
அறிகுறிகள் ஒரு சில மணித்துணிகளுக்குத்
தோன்றி, பின்னர் மறைந்து விடும்.
சிலருக்கு டிவியைப் பார்த்தால்
வலிப்பு ஏற்படும். சிலருக்கு உடலுறவின்
போது வலிப்பு ஏற்படும்.
பொதுவாக, இதற்கு இ.இ.ஜி மற்றும்
சிடி.ஸ்கேன்
பரிசோதனைகளை செய்து என்னவகை வலிப்பு என்பதை அறியலாம்.ஏதாவது காரணத்தின்
அடிப்படையில் வந்தால் அதை சரி செய்தால்
குணமாகும்.காரணமே இல்லாமல் ஏற்படுகின்ற
வலிப்பிற்கு முறையாக சிகிச்சை அளித்தால்
குணமாகும்.இங்கு முக்கியமாக
இரண்டு விஷயங்கள்.
வலிப்பு வருகின்றவர்கள் எந்த
வாகனங்களையும் ஓட்டக் கூடாது.
முற்றிலும் குணமாகிய பின்னர் ஓட்டலாம்.
அடிக்கடி வலிப்பு ஏற்படுவோர்,
தனிமையி ருக்கும் போது நெருப்பின் அருகில்
வேலை செய்யக் கூடாது.
வலிப்பின் போது சாவிக் கொத்தையோ,
இரும்புக் கம்பியையோ கொடுத்தால்
சரியாகும் என்ற
நம்பிக்கை நம்மிடையே உண்டு. எதையும்
கொடுக்கா விட்டாலும் தாமாக நின்றுவிடும்.
அச்சமயத்தில் வாந்தி எடுத்தால்
தலையை ஒருபுறமாக சாய்த்து வைத்து,
வாந்தி எடுத்த பொருட்கள்
மூச்சுப்பாதையை அடைக்காமல் பார்த்துக்
கொள்ளுதல் அவசியம். கை, கால்கள்
இழுக்கும்போது எதிலாவது வேகமாக
மோதினால் எலும்பு உடைந்துவிடும்.
அதனால் எதிலும்படாமல் பார்த்துக்
கொள்வது நல்லது.
மூளைக்கட்டி
மூளையில்
கட்டி ஏற்படும்போது பல்வேறு விளைவுகள்
உண்டாகும். மூளைக்குள் அழுத்தம்
அதிகரித்து தலைவலி ஏற்படும்.இத்தலைவலி தலைமுழுவதும்
இருக்கும். அதிகாலையில் வலி அதிகமாக
இருக்கும். இருமுதல், மூச்சை அடக்குதல்,
தலை அசைத்தல் போன்றவற்றின்
போது தலைவலி அதிகமாகும். இத்துடன்
தூக்கமின்மையும்
உண்டாகும்.தொடர்ந்து வருகிற தலைவலி,
நீண்ட நேரம் நீடிக்கின்ற தலைவலி,
நாளுக்கு நாள் அதிகமாகிற தலைவலி,
மருந்துகளுக்குக் கட்டுப்படாத தலைவலி,
ஒருவருக்கு இருந்தால் அத்தலைவலி, மூளைக்
கட்டியால் இருக்கலாம் என
யூகிக்கலாம்.மூளையின் அழுத்தம் மேலும்
அதிகரிக்கும் போது
* இடைவிடாத வாந்தி
* கண்பார்வை படிப்படியாக மங்குதல்
*நினைவுக்குறைவு அதைத்
தொடர்ந்து கோமா எனப்படும் சுயநினைவற்ற
நிலை உண்டாகும்.மூளையின் முன்புறம்
(Fronal Lobe) பாதிக்கப்பட்டால்
* உணர்ச்சிகளில் மாற்றம்
* தயக்கமின்மை
* எதையும் தாமாக செய்ய இயலாமை
* சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுதல்
*பலர் முன்னிலையில் நாணமின்றி செயல்
படுதல்
* ஞாபக மறதி
*வாசனையின்மை போன்ற அறிகுறிகள்
தோன்றும்.மூளையின் நடுப்பகுதி (Pariental
Lobe) பாதிக்கப்பட்டால்
* கணக்கிடுதல் தவறுதல்
* திட்டமிட்டு செயல்பட இயலாமை
* பேச்சு தடுமாற்றம் மூளையின் முக்கிய
பகுதியான பிரமிடல் பகுதி பாதிக்கப் பட்டால்
* கை, கால்கள் செயலிழத்தல்
ஏற்பட்டு பக்கவாதம் உண்டாகும்.மூளையின்
பின்பகுதி (ஞஸ்ரீஸ்ரீண்ல்ண்ற்ஹப் கர்க்ஷங்)
பாதிக்கப்பட்டால்
* முக்கியமாக கண்பார்வை பாதிக்கப்படும்
* கண்முன் இல்லாத பொருட்களைப்
பார்ப்பது போன்ற உணர்வு
* நன்றாக அறிமுகமானவர்களைக் கூட
அடையாளம் காண
முடியாமை போன்றவை உண்டாகும்.மூளையின்
அடிப்பகுதி (Occipital Lobe) பாதிக்கப் பட்டால்
* பேச்சுத்திறன், கேட்கும் திறன், ஞாபக
சக்தி போன்ற குறைகள்
* இல்லாத சத்தங்கள், வாசனைகள், உருவங்கள்
இருப்பது போன்றபிரமை
* சில நேரங்களில் சித்த பிரமை பிடித்தாற்
போன்ற
செயல்பாடு போன்றவை உண்டாகும்.சிறுமூளை (Cerebellum )
பாதிக்கப்பட்டால்
* நடக்கும்போது தள்ளாடுதல்
* பேச்சுக் குழறுதல்
* குறிப்பிட்ட பொருளை எடுக்க இயலாமை
* எழுத முடியாமை
* நடுக்கம்போன்றவை உண்டாகும்.
மூளையின் மேற்புறம் (Cortex)
கட்டி ஏற்பட்டால்
உடல் ஒரு பகுதியில், அல்லது ஒரு கையில்
அல்லது ஒரு கால் அல்லது ஒரு புறத்தில்
மட்டும் வலிப்பு ஏற்படும். சிறு வயதில்
வலிப்பு நோய் இல்லாதவருக்கு பின்னாளில்
வலிப்பு உண்டானால் அதுவும் உடல்
ஒரு பகுதியில் மட்டும்
வலிப்பு ஏற்படுமானால் அவருக்கு மூளைக்
கட்டியாக இருக்கின்ற வாய்ப்புகள் அதிகம்.
மூளைக்கட்டியை அறிவது எப்படி?
நவீன விஞ்ஞான முன்னேற்றத்தின் மூலம்
மூளைக்கட்டியை ஆரம்பத்திலேயே கண்டறியலாம்.
C.T. ஸ்கேன், MRI ஸ்கேன் மூலம்
மூளைக்கட்டியை மிகச்சிறிய அளவில்
இருக்கும்போதே கண்டு பிடித்து விடலாம்.
மூளைக்கட்டிக்கு சிகிச்சை முறைகள்
அறுவை சிகிச்சை மூலம்
மூளைக்கட்டியை அகற்றலாம்.
சிலருக்கு கதிர்வீச்சு ரேடியோதெரபி (Radiotheraphy)
முறையிலும் கட்டியை கரைக்கலாம்.
சிலருக்கு கிருமிகளால் உண்டாகும்
கட்டிகளை மருந்துகளின் மூலமாக
குணப்படுத்தலாம்.
அம்னீசியா
ஞாபக சக்தி, மனித இனத்திற்குக் கிடைத்த
அபூர்வ சக்தி. மூன்றுவகை ஞாபகங்கள்
உடனடி ஞாபகம் – அவ்வப்போது நடக்கிற
விஷயங்களை நினைவு கொள்ளுதல்
சமீப கால ஞாபகம் – ஓரிரு வாரத்திற்குள்
நடந்தவைகளை நினைவு கொள்ளுதல்
நீண்டகால ஞாபகம் – இது நிலையான ஞாபகம்,
சிறுவயதில் நடந்தவைகளை நினைவில்
கொள்ளுதல்.
ஞாபகசக்தியை செய்கின்ற
பகுதி மூளையி லுள்ள உறிப்போகேம்பஸ்
பகுதியாகும்.
அவ்வப்போது ஏற்படுகிற மறதியை தற்காலிக
அம்னீசியா என்றும், கடந்த
காலத்தை முழுவதுமாக மறந்துவிட்டால்
அதை குளோபல் அம்னீசியா என்றும் கூறுவர்.
வயதாகிவிடுவதால், உண்டாகிற மூளையின்
மாற்றங்கள், மூளையின் இரத்தக்குழாய்
பாதிப்புகள், மூளையில் அடிபடுதல்
தொடர்ந்த குடிப்பழக்கம்
போன்றவை அம்னீசியாவின் முக்கிய
காரணங்கள்.
Thursday, July 25, 2013
பக்கவாதம் நோயை குணப்படுத்த முடியுமா ?
Labels:
பக்காவதம்,
மருத்துவம்
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Cinema News (1)
- Facebook Message (1)
- Jeyalalitha (1)
- London (1)
- Moon (1)
- Pongal (1)
- Sports News (1)
- Surya (1)
- Tamil (15)
- Tamil Jokes (2)
- tamil song lyrics (1)
- Tamil Songs (1)
- Tamil Storys (1)
- Video (1)
- Web News (10)
- இந்தியா (2)
- உலகக் கோப்பை கிரிக்கெட் (1)
- எம்.ஜி.ஆர் (1)
- எய்ட்ஸ் (1)
- கணினி (1)
- கத்திரிக்காய் (1)
- கவிதைகள் (3)
- காதல் (3)
- காய்கறிகள் (1)
- கிரிக்கெட் (1)
- கீரை (1)
- குறிப்புகள் (1)
- சந்தேகம் (1)
- சிவாஜி (1)
- சிறுகதை (3)
- சினிமா (1)
- சினிமா விமர்சனம் (1)
- செக்ஸ் (2)
- சோயா பீன்ஸ் (1)
- தகவல்கள் (6)
- தண்ணீர் (1)
- தத்துவம் (1)
- தமிழன் (6)
- தமிழ் (9)
- தலைவலி (1)
- தவிர்க்க வேண்டியவை (1)
- திருமாவளவன் (1)
- திரைப்பட விமர்சனம் (1)
- திரைவிமர்சனம் (1)
- தொடர்கதை (1)
- நகைச்சுவை (1)
- நல்ல மனிதர்கள் (1)
- நிம்மதி (1)
- பக்காவதம் (1)
- பழமொழிகள் (1)
- பாடல் வரிகள் (1)
- புத்தர் (1)
- புற்றுநோய் (1)
- பெண்கள் (3)
- மதுரை (1)
- மருத்துவம் (1)
- மனைவி (1)
- மூலிகைகள் (1)
- லேப்டாப் (1)
- வங்கிகள் (1)
- வணிகர்கள் (1)
- வல்லாரை (1)
- வாழ்க்கை (2)
- வியாபாரம் (2)
- வெற்றி (1)
Popular Posts
-
தமிழால் இணைவோம்: வாழ்க்கையை யோசிங்கடா தலையெழுத்தை நல்லா வாசிங்கடா யோசிச்சு பாருங்கடா எல்லோரும் ஒன்னா சேருங்கடா இருக்கிற வரைக்கும் அனுபவ...
-
Movie Name:Aanandham Song Name:Pallanguzhiyin vattam Singers:Unni krishnan,Harini Music Director:S.A.Rajkumar Lyricist:Na.Muthukumar...
-
கணவர் குடும்பத்தினரின் போட்டோவை ஆபாசமாக வெளியிட்ட பெண் by abtamil Tamil newsToday, பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், கணவரின் குடும்...
-
உண்மைய சொன்னேன் 1.அழகான பொண்ணு சிரிச்சிட்டு போன அடுத்த ரெண்டு செகன்ட்குள்ள பையன் கட்டுற மனக்கோட்டை இருக்கே! ராஜராஜசோழனால கூட கட்ட முடியாது...
-
neeyae neeyae naanae neeyae nenjil vaazhum uyir theeyae neeyae thandhai neeyae thOzhan neeyae thaalaattidum en thOzhi neeyae april may v...
-
இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை ஒரு ராணுவப்படை வீரர்கள் கும்பலாக வருகிறார்கள்.கண்ணில் பட்டவர்களை யெல்லாம் வெட்டிச்சாய்க்கிறார்கள். மக்கள...
-
பிரவுசருக்கு ஒரு குளிர் கண்ணாடி.! by Marikumar பார்த்துக் கொண்டிருக்கும் டிவி நிகழ்ச்சிகளின் போது நடுவே ஒரு சின்ன பிரேக் என்று சொல்வது ப...
-
தனுஷ் கைவசம் சிக்கிய சிவகார்த்திகேயன் by abtamil ஆண் நண்பருடனான ... - Tamil newsToday, தமிழ் சினிமாவில் தனுஷ்- சிவகார்த்திகேயன் நட்பான...
-
துபாயில் முதன் முறையாக 22 கேரட் தங்க டீ!! by vijigermanyNew Tamil Jokes - . துபாயில் முதன் முறையாக 22 கேரட் தங்க டீதங்கத்தின் விலை உயர்ந...
-
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – விமர்சனம்! by admin TamilSpyToday, இருட்டுக்கே வாக்கப்பட்ட இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின். ஆனால் பிரகாசமான...
No comments:
Post a Comment