Thursday, July 25, 2013

தேவர்மகன் சிவாஜி... சிவாஜிதான்

பி.சி.ஸ்ரீராமை ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதுவும் இந்த விகடன் மேடையில் அவர் பதில் சொல்லும் விதத்தை பார்க்கும் பொழுது அவர் மேல் இருக்கும் மரியாதை இன்னும் கூடுது...

சிவாஜி பற்றி கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்திருக்கும் பதிலை படிக்கும் பொழுது, இதுக்கு முன்னாடி பதில் சொல்லிக்கிட்டு இருந்த அலட்டல் அய்யாசாமி ஞாபகத்து வந்துட்டு போனாரு.
********************

 ''ரொம்ப ஆச்சர்யமா 'தேவர்மகன்’ல நடிச்சதுக்காக சிவாஜிக்கு தேசிய விருது கொடுத்தாங்க. அந்தப் படப்பிடிப்பில் சிவாஜியுடனான உங்கள் அனுபவம்..?''


''ஸ்க்ரிப்ட் பேப்பர்ல சாதாரணமா இருக்கிற ஒரு வார்த்தை, படப்பிடிப்பில் கிளாப் அடிச்சதும் சிவாஜி சார் சொல்றப்போ அட்டகாசமான எக்ஸ்பிரஷன் சேர்ந்து அற்புதமான பன்ச்சா மாறிடும். 'தேவர் மகன்’ ஷூட்டிங் ஸ்பாட்ல சிவாஜி சாருக்குப் போட்டியா கமலும் பிரமாதமா ஸ்கோர் பண்ணுவார். மத்தநடிகர் கள் சிவாஜி சார் மேல இருக்கிற மரியாதை கார ணமா அவரோட நடிக்கும்போது பம்மிப் பம்மி நடிச்சாங்க. அவரை எதிர்த்துப் பேச வேண் டிய கதாபாத்திரங்கள்கூட கையைக் கட்டிக் கிட்டு பவ்யமா நடிச்சாங்க. பஞ்சாயத்து நடக்கிற காட்சிகள்ல நாசர் கூட கொஞ்சம் அடக்கித்தான் வாசிச்சார். கேமரா ஃப்ரேம்ல முதல் ஆளா அந்தக் காட்சிகளைப் பார்த்த எனக்கு என்னமோ தப்பா இருக்குனு தோனிட்டே இருந்தது. உடனே சிவாஜி சார் கிட்ட சொல்லிட்டேன். 'எல்லாரும் உங்கமுன் னாடி ரொம்ப மரியாதையா நடிக்கிறாங்க. அது சிவாஜிக்குக் கிடைக்குற மரியாதை. ஆனா, பெரிய தேவர் கேரக்டருக்கு அது தேவை இல்லை. இந்த மரியாதை படத்தையே பாழாக்கிரும்’னு சொன்னேன். ரெண்டு நிமி ஷம் கண்மூடி யோசிச்சார் சிவாஜி சார். மத்த வங்க நடிச்சதை மனசுல அசைபோட்டுப் பார்த் திருப்பார்னு நினைக்கிறேன். 'தம்பி சொல் றது கரெக்ட்டு... ஏயப்பா... எல்லாரும் அந்தந்த கேரக்டர் மாதிரி நடிங்கப்பா... ரீ டேக் போகலாம்’னு சொல்லிட்டார். அந்த டெடி கேஷன்தான் சிவாஜி.
படப்பிடிப்பு முழுக்கவே நான் அவரை ஃப்ரேம் வழியா அணுஅணுவா பிரமிச்சு ரசிச்சுப் பார்த்தேன். தன்மானம் உள்ள மனி தன் ஒரு வார்த்தையைத் தாங்க மாட்டான்னு சொல்வாங்களே.. அதை சிவாஜி நடிப்புல பார்த்தேன். பஞ்சாயத்துக் காட்சியில சிவாஜி யைப் பார்த்து, 'என்னை உம்ம மீசை மசு ருன்னு நினைச்சீகளா... நினைச்சா முறுக்க, நினைச்சா மடக்க’னு நாசர் ஒரு வசனம் பேசுவார். உடனே சிவாஜி சார் சட்டுனு கோபப்பட்டு உக்காந்திருந்த சேரை விசிறி எறிஞ்சுட்டு, விடுவிடுனு நடந்து கார்ல ஏறிப் போகணும். இதுதான் சீன். நாசர் வசனம் சொன்னதும் குபுக்னு கோபப்பட்டு, கோபத்துல நாலு அதட்டுப் போட்டுட்டு வந்த சிவாஜி சார், திறந்திருந்த கார் கதவை படார்னு அறைஞ்சு சாத்திட்டு, நடக்க ஆரம்பிச்சிட்டார். அவ்ளோ கோபத்துல இருக்கிற ஒரு மனுஷன் அந்த நேரம் அப்படித்தான் நடந்துக்குவான்னு பின்னாடி சொன்னார். அவர் கணிச்ச மாதிரியே அந்தக் காட்சி ஆடியன்ஸ்கிட்ட பெரிய தாக்கத்தை உண்டாக்குச்சு. சிம்பிளா சொல்லணும்னா, சிவாஜி... சிவாஜிதான்!''

No comments:

Post a Comment

Labels

Popular Posts